அறந்தாங்கி அரசு கல்லூரியில் வளாகத்தூய்மைப்பணி முகாம்!!

X
அறந்தாங்கி அரசு கல்லூரியில் வளாகத்தூய்மைப்பணி முகாம் நடைபெற்றது.
ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், வளாகத்தூய்மைப்பணி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். முகாமில், கல்லூரி தரைத்தள வளாகத்தில் உள்ள முதல்வர் அறை, நிதியாளர் அறை உள்ளிட்ட பகுதிகளில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் தூய்மைப்பணி மேற்கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை ஒருங்கிணைத்தார்.
Next Story
