ராமநாதபுரம் பகுதி நேர ரேஷன் கடை பொதுமக்கள் கோரிக்கை

முதுகுளத்தூர் அருகே உள்ள மேலமானங்கரை, கடம்பன் குளம், மரவெட்டி உள்ளிட்ட கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலமானங்கரை, கடம்பன் குளம், மரவெட்டி உள்ளிட்ட கிராமத்தில் 200-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழி லாக செய்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை,பாமாயில், மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட் களை வாங்க வேண்டுமானால் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முதுகுளத்தூருக்கு சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் குடும்ப தலைவிகள், முதியோர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர். எனவே தங்கள் பகுதி யில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story