அனுமன் ஜெயந்தி – ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம்

அனுமன் ஜெயந்தி – ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம்
X
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடுஆற்காடு வட்டம், முப்பதுவெட்டி கிராமம், கீரைகார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு சஞ்சீவி வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கீரைகார தெரு இளைஞர்கள் மற்றும் ஊ
அனுமன் ஜெயந்தி – ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், முப்பதுவெட்டி கிராமம், கீரைகார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு சஞ்சீவி வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கீரைகார தெரு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில், நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு, ஆஞ்சநேயரை வழிபட்டு அருள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆன்மிக நிகழ்வு சிறப்பாகவும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது.
Next Story