தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பேரணி

X
Pudukkottai King 24x7 |19 Dec 2025 2:08 PM ISTபுதுக்கோட்டை மாவட்ட திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு விருந்தினராக ஆட்சியர் அருணா தலைமையில் பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர் இப்பேரணியில் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் எத்தகைய பாகுபாடும் இன்றி சமமாக வளர்ப்போம் வீட்டு வேலைகளை பெண்களும் ஆண்களும் சரிசமமாக பகிர்ந்து கொள்வோம் பெண்கள் விரும்பும் உயர் கல்வி கற்பதை ஊக்க வைக்க வேண்டும் அனைத்து துறை பணிகளிலும் பெண்களையும் சம பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் என்ற 9 பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்தனர் இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் விழிப்புணர்வு பதங்களை கையில் ஏந்தியபடி பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர் இப்பேரணியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் பாலசுந்தரம் உதவி திட்ட அலுவலர் சி முத்து உதவி திட்ட செயலாளர் மகாதேவி ஆணையர் இந்திராணி மற்றும் அரசு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
