ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எஸ் ஐ ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைம

X
Ranipet King 24x7 |19 Dec 2025 5:08 PM ISTஎஸ் ஐ ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 9,12,543 வாக்காளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளனர்
எஸ் ஐ ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 9,12,543 வாக்காளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளனர் முன்பு நான்கு சட்டமன்ற தொகுதிகளும் சேர்த்து 10,57,700 வாக்காளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எஸ் ஐ ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் மொத்தமாக 4,46,469 வாக்காளர்களும் பெண் வாக்காளர்களாக மொத்தமாக 4,65,973 வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்களாக 101 வாக்காளர்கள் என மொத்தமாக 9,12,543 வாக்காளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த எஸ் ஐ ஆர் சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியலின் மூலம் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் இதில் குறிப்பாக கண்டறிய இயலாதவை என 31,5 நபர்களும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர் 60 ஆயிரத்து 277 நபர்கள் இறப்பு 46 ஆயிரத்து 488 நபர்கள் இரு முறை பதிவு என 6 ஆயிரத்து 875 நபர்கள் மற்றவை 516 நபர்கள் என நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது முன்னதாக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமாக 10 லட்சத்து 57 ஆயிரத்து 700 நபர்கள் வாக்காளராக இருந்தது குறிப்பிடத்தக்கது
Next Story
