ராசிபுரம் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி தங்கக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்..

ராசிபுரம் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி தங்கக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்..
X
ராசிபுரம் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி தங்கக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்..
ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம். ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக பக்தர்களால் கொண்டாடப்படும் கடவுள் அனுமன். ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள் புரியவும் அனுமானை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்து சேரும். மார்கழி மாதம் அமாவாசை உடன் வரும் மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த தாக கூறப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் அனுமன் ஜெயந்தி விழா ராசிபுரம் பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரித்து யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையான மங்கள வாசனை திரவியங்களால் அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் கோவில் அர்ச்சகர் ஆதிசேஷன் அவர்கள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேயருக்கு தங்க காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கட்டளைதாரர்களால் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
Next Story