தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச்செயலாளராக தங்கதுரை பொறுப்பேற்பு!!

அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவராக இருப்பவர் தங்கதுரை. ஆடிட்டரான இவரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச்செயலாளராக சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார். மாநில இணைச்செயலாளராக அறிவிக்கப்பட்ட தங்கதுரை தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பதவியேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக பொறுப்பேற்று அறந்தாங்கி திரும்பிய தங்கதுரைக்கு அறந்தாங்கி முன்னாள் எம். எல். ஏ உதயம்சண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்கணேசன்,நகர திமுக செயலாளர் ராஜேந்திரன், அறந்தாங்கி தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன், வர்த்தக சங்க செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் முகமதுஹாரிஸ், துணைத்தலைவர் அரோமாபன்னீர்செல்வம், ராஜ்மோகன், பாலாசரவணன், செந்தில்குமார், செல்வம் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
