சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நீரஜ்கர்வால் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்
Perambalur King 24x7 |19 Dec 2025 10:21 PM ISTபுதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணிகளை செய்திட எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து துறைமங்கலம் பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நீரஜ்கர்வால் பார்வையிட்டு ஆய்வு
பெரம்பலூர் மாவட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நீரஜ்கர்வால் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நிமியக்கப்பட்டுள்ள திரு.நீரஜ் கர்வால், (NEERAJ KHARWAL IAS.,)பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். முதலாவதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாகவும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மற்றும் புதிய வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, முன்னிலையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆலோசனை செய்த பார்வையாளர் அவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்தும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணிகளை செய்திட எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து துறைமங்கலம் பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நீரஜ்கர்வால் பார்வையிட்டு ஆய்வுசெய்து, அந்த பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலமெடுப்பு) சொர்ணராஜ், வருவாய் கோட்டாட்சியர் அனிதா , மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் , தேர்தல் வட்டாட்சியர் அருளானந்தம் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story


