ராசிபுரம் முத்துகாளிப்பட்டியில் உயர் மின் விளக்கு கோபுரத்தை எம்பி ராஜேஷ்குமார் திறந்து வைத்தார் ...

X
Rasipuram King 24x7 |19 Dec 2025 10:35 PM ISTராசிபுரம் முத்துகாளிப்பட்டியில் உயர் மின் விளக்கு கோபுரத்தை எம்பி ராஜேஷ்குமார் திறந்து வைத்தார் ...
ராசிபுரம் அருகே முத்துக்காளைப்பட்டி பகுதியில் உயர் மின் விளக்கு கோபுரத்தினை திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் சாலை அருகே உள்ளது முத்துகாளிப்பட்டி கிராமம். இந்த பகுதியில் உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2.10 லட்சம் மதிப்பில் உயர் மின்னழுத்த மின் விளக்கு கோபுரம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். கோபுரம் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி. ஜெகநாதன், தலைமை வகித்தார். முத்துக்காளைப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அருள். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி கண்ணன்,முத்து செல்வன் எ ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் மற்றும் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் என உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...
Next Story
