குளித்தலையில் ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயருக்கு ஐந்தாம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா

ஒரு லட்சம் வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தும் நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வைகைநல்லூர் கிராமம் புதுப்பாளையம் எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வீரிய ஆதிசக்தி விநாயகர் ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் ஐந்தாம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஒரு லட்சம் வடமாலை சாத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் புதுப்பாளையம், குட்டப்பட்டி, எம்ஜிஆர் நகர், கோட்டைமேடு, மேல குட்டப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். அனுமனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் பிரசாதமாக வடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story