நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
X
வடவாளம் ஊராட்சியில் நல காக்கும் ஸ்டாலின் முகாமில் கலந்துகொண்ட அமைச்ச ரகுபதி
புதுக்கோட்டை மாவட்ட புதுக்கோட்டை வட்டாரம் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து நடத்தும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று வடவாளம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் நடைபெற்றது முகாமில் 17 துறை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொது மருத்துவம் அறுவை சிகிச்சை மருத்துவம் எலும்பு முறிவு மருத்துவம் மகளிர் மகப்பேறு மருத்துவம் மற்றும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரத்த பரிசோதனை இ சி ஜி உள்ளிட்ட 3000 மதிப்புள்ள பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில் துவக்கி வைப்பதற்காக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கி அதன் பின்னர் மேடையில் உரையாற்றினார் முதலமைச்சரின் நான்கு ஆண்டு சாதனைகளை பற்றியும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வர் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் அவர் மீண்டும் ஆட்சியில் அமர்வார் என்று மேடையில் எடுத்துரைத்தார் இந்நிகழ்வில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் மருத்துவஅணி அமைப்பாளர் டாக்டர் முத்து கருப்பன் வடவாளம் மணிமாறன் அதிமுக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞாண பிரகாசம் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story