கும்மிடிப்பூண்டி அடுத்த மாதவரத்தில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ துரை சந்திரசேகர்.

X
Gummidipoondi King 24x7 |20 Dec 2025 1:02 PM ISTதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், போந்தவாக்கம் ஊராட்சி, மாதவரம் கிராமத்தில் ஏஜிஏஎம்டி திட்டம் 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் நியாய விலை கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், போந்தவாக்கம் ஊராட்சி, மாதவரம் கிராமத்தில் ஏஜிஏஎம்டி திட்டம் 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் நியாய விலை கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்க சார்பதிவாளர் எம். இளையராஜன் தலைமை தாங்கினார். ஆரணி தொடக்க வேளாண்மை | கூட்டுறவு சங்க செயலாளர் ஜி.பாஸ்கர் முன்னிலை வகித்தார். அனைவரையும் விற்பனையாளர் ரேகா / வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதியின் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய நியாய |விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். இதன் பின்னர், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்தார். நிகழ்ச்சியின் முடிவில், ஊராட்சி செயலர் சுப்பிரமணி அனைவருக்கும் நன்றி | கூறினார். T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)
Next Story
