ராமநாதபுரம் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
X
பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆரோக்கிய பிரமிளா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம், மாவட்ட செயலாளர் தனலெட்சுமி ஆகியோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் லதா, சந்திரலேகா, அஜீதா, செபஸ்டின் அனிதா, சுபுகான்நிஷா மற்றும் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி, எம்ஆர்பி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 8 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பணிநேரம் முடிந்து ஓய்வு நேரத்தில் செவிலியர்கள் பகுதி பகுதியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story