கோவில் அருகே சாமியாரின் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு

கோவில் அருகே சாமியாரின் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு
X
அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது
கரூர் மாவட்டம் தரகம்பட்டி நடுதெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் மாணிக்கவேல் (வயது 47). இவர் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் முடித்து உள்ளார். இவர் கடந்த 22 ஆண்டுகளாக அவரது குலதெய்வமான வீரமாசம்பாயிகோவில் முன்பு உள்ள புற்றுடன் கூடிய வேப்பமரத்து அடியில் அமர்ந்து தியானம், வழிபாடு போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்து உள்ளார். இந்நிலையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். பின்னர் அவரது உடலை, அவர் வாழ்ந்த இடத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.இதற்கு அருகில் இருந்த நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாணிக்கவேலின் உறவினர்கள் போராட்டம் செய்ய முற்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் ராஜாமணி, குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், நங்கவரம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணிக்கவேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேறு இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Next Story