மணப்பாறை அருகே தொழில் போட்டியால் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை.

மணப்பாறை அருகே தொழில் போட்டியால் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை.
மதுரை மாவட்டம் கீழதோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் பாண்டி என்பவரும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காசா நகர் பகுதியை சேர்ந்த அரவிந்த் மற்றும் அவருடைய தம்பி விஜயபாண்டி ஆகியோருடன் சேர்ந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இடைத்தரகர்களாக இருந்து தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் ஒருவருக்கொருவர் தொழில் போட்டி ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டிருந்த நிலையில் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை பேசி தீர்ப்பதற்காக கடந்த 09.11.2019 அன்று திருச்சிக்கு காரில் வந்து கொண்டிருந்த பொழுது மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோயில் பகுதியில் அரவிந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் ஜெகதீஷ் பாண்டியன் காரை மறித்து ஜெகதீஷ் பாண்டியனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.இந்த சம்பவத்தில் ஜெகதீஷ் பாண்டியன் உயிரிழந்த நிலையில் அவருடன் வந்து அவருடைய அண்ணன் சசிகுமார் வெட்டுக்காயங்களுடன் தப்பிச்சென்ற நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து 09.11.2019 அன்று மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக தொடர்புடைய 14 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் வழக்கிற்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது திருச்சி மாவட்டம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கின் எதிரிகளான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காசா நகர் பகுதியில் இருந்து அங்குசாமி மகன் A1.அரவிந்த் 31, திண்டுக்கல் பேகம்பூர் எம்டிஎஸ் காலனி சேர்ந்த நாகசாமி மகன் A3.முத்துவேல் 34,திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் A4 .பாதுஷா 37,திருச்சி கருமண்டபம் சக்தி நகர் பகுதியில் சேர்ந்த கலியமூர்த்தி மகன் A5.ஆனந்த் 45,தேனி பெரிய பள்ளிவாசல் தெரு பெரியசாமி மகன் A6.மதன் குமார் 31, ஆகியோர் குற்றவாளிகள் என திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்துள்ளார். முதல் எதிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் மற்றும், மற்ற நான்கு எதிரிகளுக்கும் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனை அடுத்து எதிரிகள் ஐந்து நபரையும் திருச்சி மத்திய சிறையில் மணப்பாறை காவல்துறையினர் அடைத்தனர்.
Next Story