ஸ்ரீஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்ஸவம் இன்று ஆரம்பமானது உற்ஸவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்ஸவம் இன்று ஆரம்பமானது உற்ஸவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது
ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்ஸவம் இன்று ஆரம்பமானது உற்ஸவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது 30.12.25 வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் திறப்பம் அதைதொடர்ந்து எண்ணெய் காப்பு உற்ஸவமுமம் நடைபெறுகிறது ஸ்ரீவில்லிபுத்தூரில் பகல்பத்து உற்ஸவம் பச்சை பரத்துதல் நிகழ்ச்சியோடு இன்று ஆரம்பமானது ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் தேரோட்டம் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும் அதற்கு அடுத்தபடியாகிய மார்கழி தமிழ் திருவிழாவாகிய பகல் பத்து மற்றும் இராப்பத்து என்ற நிகழ்ச்சிகள் வருடந்தோறும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது இன்று துவங்கும் இந்த பகல் பத்து நிகழ்ச்சியை தொடர்ந்து முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறக்கு நிகழச்சி 30.12.25 அன்று நடைபெறுகிறது அன்று மாலையே இராப்பத்து எனப்படும் நிகழ்ச்சி துவங்கும் அதனை தொடர்ந்து எண்ணெய் காப்பு உற்ஸவமும் நடைபெறும் இவ்வாறாக நடைபெறும் இருபது நாள் நிகழ்ச்சிக்கும் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னர் ஒவ்வொரு நாளும் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலா செய்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார் இந்நிலையில் இந்த வருடத்திற்க்கான பகல் பத்து நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக துவங்கியது பகல்பத்து துவக்க விழாவான இன்று மாலை பச்சைபரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது பச்சைபார்த்தல் எனப்படுவது சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஸ்ரீஆண்டாளை நந்தவனத்தில் இருந்து எடுத்து வளர்த்த பெரியாழ்வாரின் சந்ததிகள் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகின்றனர் ஒவ்வொரு வருடமும் பகல்பத்து உற்ஸவம் ஆரம்பிக்கும் நாளன்று தன்னை நந்தவனத்தில் இருந்து எடுத்து வளர்த்த தந்தையாகிய பெரியாழ்வாரின் வீட்டிற்க்கு செங்கமன்னருடன் வருகை தந்து சீர் வாங்கிச் செல்வது வழக்கம் அவ்வாறு வரும் போது பச்சை காய்கறிகளை பரப்பி அதை ஸ்ரீஆண்டாள் மற்றும் ரெங்க மன்னாரை பார்க்க வைத்தால் நாடு முழுவதும் ஏப்போதும் பசிபட்டியின்றி வளமாக இருக்கும் என்பது ஐதீகம் இந்த பச்சை பரத்துதல் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடதக்கதாகும் மேலும் இவ்வாறு பரப்பி வைக்கப்படிருக்கம் பச்சை காய்கறிகளை ஸ்ரீஆண்டாள் பார்த்த பின்பு தங்களின் வீடுகளுக்கு எடுத்து சென்றால் தங்களின் விடுகளில் செல்வம் பெருகும் என மக்கள் கருதுவதால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து வருகை தந்த மக்கள் முந்தியடித்துக் கொண்டு காய்கறிகளை எடுத்து சென்றனர் இதனைக் காண தமிழகதின் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளாமான பக்தர்கள் வந்து ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமண்ணாரை தரிசனம் செய்தனர் இது குறித்து பெரியாழ்வாரின் சந்ததியான சுதர்ஸன் பெரியாழ்வாரின் 225 ஆவது சந்ததியான தங்கள் வீட்டிற்கு தங்கள் வீட்டுப் பெண்ணான ஸ்ரீஆண்டாள் மற்றும் மருமகன் ரெங்கமன்னார் ஆகியோர் வருடத்திற்கு ஒரு முறை அதாவது பகல் பத்து உற்ஸவத்தின் முதல் நாளான இன்று வருகை தந்து தங்களது சீசியர்களான கட்டளைப்பட்டி மக்கள் தரும் பச்சை காய்கறிகள் மற்றும் சீர்வரிசைகளை வாங்கி செல்வார் என்றும் அதனடிப்படையில் இன்று மாலை தங்களது வீட்டிற்கு வந்த ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னாருக்கு தமிழ் காய்கறிகளையும் தங்களது வீட்டில் தயார் செய்த மணிப்ருப்பு திரட்டு பால் ஆகிய பதார்த்தங்களையும் சீர்வரிசைகளையும் பெற்றுச்சென்றார் என்றும் மேலும் இன்று ஒரு நாள் மட்டும் தங்கள் விட்டிலேயே சாய இரட்சை பூஜை நடைபெறும் என்றும் இந்நிகழ்விற்கு பச்சைப ரத்துதல் என்றும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்திருப்பதாக கூறினார்.
Next Story