நாமக்கல்லில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி!

நாமக்கல்லில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி!
X
நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில், மின் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 14 தொடங்கி, வரும் 20ம் தேதி வரை மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக நாமக்கல்லில், மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 முதல் 20 தேதி வரையில் மின் சிக்கன வார விழா கடைபிடிப்பது வழக்கம். இதனையொட்டி, பல்வேறு மின் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த வகையில்,
நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மோகனூர் சாலை, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும், தேவைப்படாத நேரத்தில் மின்விசிறிகள், மின்விளக்குகளை நிறுத்திவைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என பேரணியில் பங்கேற்றோா் முழக்கங்கள் எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த பேரணியில், நாமக்கல் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஆர்.கே.சுந்தரராஜன், உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த்பாபு, பாரதிராஜா, சௌந்தரபாண்டியன், பாஸ்கர், மனோகரன், நாகராஜன் மற்றும் மின் வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்
Next Story