பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து நடத்திய பசுமை விழாவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்பித்த மாவட்ட ஆட்சியர்.

X
NAMAKKAL KING 24X7 B |20 Dec 2025 9:54 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து நடத்திய பசுமை விழாவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், முன்னிலையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து நடத்திய பசுமை விழாவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் நீர்மருத்து, ஆயன், பாதாம், புங்கன், வேம்பு, அரசு, அத்தி, மகிழம் உள்ளிட்ட 55 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற விழாவில், வேளாண்மைத்துறையின் சார்பில் 2024-25ஆம் ஆண்டு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், எருமப்பட்டி, புதுச்சத்திரம், பள்ளிபாளையம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 7 விவசாயிகள் (எள், பச்சைப்பயறு, கம்பு, கரும்பு, நெல் ஆகிய பயிர் வகைகள்) வெற்றி பெற்று ரூ.11.00 இலட்சம் பரிசு தொகையினை பெற்றனர். அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விவசாயிகள் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் சு.மல்லிகா, துணை இயக்குநர் ப.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
