நெகிழி பையை பயன்படுத்துவதில்லை பெரம்பலூர் உணவகங்களில்

ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள இடர்பாடுகள், மற்றும் கமிஷன் தொகை குறித்து விவாதிக்கப்பட்டது, மேலும் உணவு பாதுகாப்பு துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து செயல்பாடுகளும் நடத்துவது எனவும், மேலும் தங்கள் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் காவல்துறை அரசுத்துறை அனைவருக்கும் நன்றி
பெரம்பலூர் மாவட்ட ஓட்டல்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் நெகிழி பையை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டுளள்து. பெரம்பலூர் மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் சார்பில் அதன் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், டீக்கடைகள், அடுமனை, தங்கும் விடுதி, உள்ளிட்ட இடங்களில் நெகிழிப் பையை பயன்படுத்துவதில்லை என்றும், அரசு சார்ந்த உரிமங்கள் மற்றும் அனுமதிகள் முறையாகப் பெற்று அவற்றை பின்பற்றுவது என்றும், ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள இடர்பாடுகள், மற்றும் கமிஷன் தொகை குறித்து விவாதிக்கப்பட்டது, மேலும் உணவு பாதுகாப்பு துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து செயல்பாடுகளும் நடத்துவது எனவும், மேலும் தங்கள் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் காவல்துறை அரசுத்துறை அனைவருக்கும் நன்றி அறிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story