அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்.

ஆரணி நகரம் இராமகிருஷ்ணாபேட்டை பகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.
ஆரணி நகரம் இராமகிருஷ்ணாபேட்டை பகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. ஆரணி நகரம், இராமகிருஷ்ணா பேட்டை பகுதியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெ பேரவை சார்பில் திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பாரி பி.பாபு தலைமை தாங்கினார். 45வது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரணி ராமகிருஷ்ணன் பேட்டை பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று டீக்கடை, காய்கறி கடை, பழ கடை, மளிகை கடை, பேருந்து நிறுத்த பயணிகள் போன்ற இடங்களில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் ஆரணி நகர செயலாளர் அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் வனிதா சதீஷ், மாவட்ட பொருளாளர் அடையாளம் வேலு, ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், நகரமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சுதாகுமார், விநாயகம், எஸ்.கே. வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி துரை மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த கலைவாணி, பையூர் முன்னாள் ஊராட்சி தலைவி மணிமேகலை, நிர்வாகிகள் ஆ.பெ.வெங்கடேசன், சைதை சுப்பிரமணி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஏ.கே.பிரபு, மில் சரவணன், சேட்டு மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story