பாஜக ஓபிசி அணி ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.

ஆரணி ஆற்று பாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக ஓபிசி அணி ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
ஆரணி ஆற்று பாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக ஓபிசி அணி ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓபிசி அணியின் மாநிலதுணைத்தலைவர் ஆர்.மோகனம் தலைமை தாங்கினார். அனைவரையும் மாவட்ட தலைவர் கவிதாவெங்கடேசன் வரவேற்றார். ஆரணி சட்டமன்றத் தொகுதி இணை பொறுப்பாளர் சைதை வ.சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் மற்றும் ஓபிசி அணி மாவட்ட தலைவர்கள் பன்னீர்செல்வம், செந்தில், ஆர்.ராமச்சந்திரன், பி.தர்மராஜா, கே.டி.எஸ்.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் போளூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சி.ஏழுமலை வாழ்த்துரை வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக ஓபிசி அணியின் மாநில தலைவர் பேராசிரியர் வீர.திருநாவுக்கரசு கலந்துகொண்டு ஓபிசி அணி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். மேலும் கட்சிப்பணிகள் குறித்து பேசினார். மேலும் இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, மாநில நிர்வாகி ஈஸ்வரன்ஜி,எஸ்.ராஜசேகரன், ரகுநாதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நித்யாதனந்தம், அலமேலு, அமுதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஆரணி தொகுதிக்கு வந்த சிறப்பு விருந்தின்ர ஓபிசி அணி மாநிலதலைவர் வீர.திருநாவுக்கரசுக்கு ஆரணி அண்ணாசிலை அருகில் பட்டாசு வெடித்தும், வானவேடிக்கை வெடித்தும், செண்ட மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.
Next Story