உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
X
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் அறந்தாங்கி நகர திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகள் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிகள் அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம், ஆவுடையார் கோவில் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்துரை மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Next Story