தென்னை மரங்களை தாக்கும் நோய்களிலிருந்து அவற்றை பாதுகாக்க இயற்கை உரம் செயல்முறை விளக்கம் எம்எல்ஏ ஈஸ்வரன் ஏற்பாட்டில் தனியார் நிறுவனத்தினர் செய்து காண்பித்தனர்
Tiruchengode King 24x7 |21 Dec 2025 2:26 PM ISTதிருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பாதிக்கும் வகையில் தென்னை மரங்களை தாக்கும் தாக்கும் காண்டா மிருக வண்டு, கள்ளிப்பூச்சி, வெள்ளை ஈ குருத்துக்கடி அனைத்து வகை நோய்களுக்கும் இயற்கை முறையில்மருந்து மற்றும் தெளிக்கும் முறை செய்முறை விளக்கம் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் ஏற்பாடு
திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கில் தென்னை விவசாயம் நடந்து வரும் நிலையில் விவசாயத்தையே விட்டுவிடும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்படும் வகையில் நோய் தாக்குதல்கள் ஏற்பட்டு குருத்து காய்தல் ,காய்கள் உதிர்தல், போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாவதால் தென்னை மரங்களை வெட்டி சாய்க்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனை களைய பல்வேறு நடவடிக்கைகளை வேளாண்மை துறை எடுத்து வந்த போதிலும் அனைத்தும் ரசாயன பூச்சி மருந்துகளாகவே இருப்பதால்முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லைமேலும் ரசாயன மருந்துகளை பயன்படுத்த அச்சப்படும் விவசாயிகள்தங்களுக்கு மாற்று வழி கிடைக்காதா என நினைத்து வந்த நிலையில்ஈரோடு கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் முழு ஆய்வு செய்து சாணம்,கோமியம்,மற்றும் பாக்டீரியாக்களை பயன்படுத்தி இயற்கை உரம் ஒன்றை தயாரித்து இருப்பதாகவும் இதன் மூலம் பல விவசாயிகள் பலனடைந்து வருவதாகவும் திருச்செங்கோடு தென்னை விவசாயிகளுக்கு தெரிவித்ததை அடுத்துஇதற்கான செயல்முறை விளக்கத்தை செய்து காண்பிக்கும்படி பகுதி விவசாயிகளில் ஒருவரான நடேசன் என்பவர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை தாக்கியுள்ள நோய்களுக்கு மருந்து அடிக்கும் வகையில் செயல்முறை விளக்கத்தை ஏற்பாடு செய்து இருந்தார். இதனை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,திருச்செங்கோடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுகன்யா தோட்டக்கலைத்துறை அலுவலர் பூர்ணிமா ஆகியோருடன் நடேசன் நிலத்தில் நடந்த செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டுஇந்த மருந்து தெளிப்பதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன மருந்துகள் கலக்கப்படுகிறது இதனால் நிரந்தரமாக காண்டாமிருக வண்டு கள்ளிப்பூச்சி வெள்ளை ஈஆகியவற்றை தடுக்க முடியுமா என்பது குறித்து கேட்டறிந்தனர் மேலும் இந்த மருந்து தென்னைக்கு மட்டும் தானா மற்ற பல மரங்கள் பூச்செடிகள் கீரைகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்தும் கிரண் ஆர்கானிக் பெர்டிலைசர் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆய்வாளருமான தேவராஜனிடம் கேட்டறிந்தனர்.அப்போது தேவராஜன் எந்த வித ரசாயனமும் கலைக்காமல் மாட்டுச்சாணம் கோமியம் மற்றும் பாக்டீரியாக்களை மட்டுமே பயன்படுத்தி வேப்பெண்ணெய் உள்ளிட்டசில எண்ணெய்களைபயன்படுத்தி இந்த மருந்தை உருவாக்கி தருவதாகவும் ஒரு மரத்திற்கு ஒரு லிட்டர் என நீர் பாய்ச்சும் போது மரத்தின் வேர் பகுதியில்தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஊட்டி வந்தால் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்த முடியும் எனவும் பக்கத்தில் உள்ள தோட்டத்துக் காரர்களும் இதே போல் மருந்தடித்தால் நோய் பரவாது எனவும் பாக்டீரியாக்களை எண்ணெயுடன் சேர்ந்து பயன்படுத்துவதால் பச்சயத்தை சாப்பிடும் பூச்சிகள் அளிக்கப்பட இந்த பாக்டீரியாக்கள் உதவும் எனவும் ரசாயனம் இல்லாத இந்த உரம் தென்னையை பாதுகாப்பதோடு நிலத்தின் தன்மையும் பாதுகாக்கும் எனக் கூறினார் இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மருந்தின் தன்மை அது ஏற்படுத்தும் விளைவுகள் தெளிப்பான் எப்படி பெறுவது என்பது குறித்து எல்லாம் தேவராஜனிடம் கேட்டறிந்தனர் தேவராஜனுடன் அவரது நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில்குமார், கிரன்தீப், மணி ஆகியோர்வந்திருந்து மருந்தடித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.ஏதாவது ஒரு மருந்தால் தங்களது தென்னை மரம் காக்கப்பட்டால் போதும் என்ற நிலையில் விவசாயிகள் ஆர்வத்துடன் இந்த செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டனர்.
Next Story


