காரையூரில் மாபெரும் கபடி போட்டி பரிசு வழங்கிய முன்னாள் எம்எல்ஏ

X
Pudukkottai King 24x7 |21 Dec 2025 4:40 PM ISTபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிகாரையூரில் அதிமுக இளைஞர்கள் சார்பில் கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் அதிமுக இளைஞர்கள் சார்பில் மாபெரும் ஒரு ஊர் கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடி போட்டியை புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான பி.கே. வைரமுத்து தலைமை ஏற்று போட்டியை தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.இந்த நிகழ்வில் பொன்னமராவதி வடக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி கண்ணப்பன்,தெற்கு ஒன்றிய செயலாளர் ஆலவயல் சரவணன், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் குழிபிறை பாண்டியன், , ஒன்றிய அவைத் தலைவர் பழனியாண்டி,அரசமலை கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சிதம்பரம்,இளைஞர் இளம் பெண்கள் பாசறை வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.எஸ்.சேகர், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
