நாமக்கல் ஸ்பார்கிள் அகாடமி குழந்தைகள் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே !
Namakkal King 24x7 |21 Dec 2025 5:05 PM ISTகுழந்தைப் பருவத்திலிருந்தே சுய ஒழுக்கம், ஆளுமைத்திறன், மனித நேயம் உள்ளிட்ட பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.
நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள ஸ்பார்கிள் அகாடமி குழந்தைகள் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குழு மாவட்ட தொடர்பு அலுவலர் சி.ஆர்.இராஜேஸ் கண்ணன் தலைமையேற்று ஒலிம்பிக் சுடர் ஏற்றி துவக்கி வைத்து பேசுகையில்...குழந்தைப் பருவத்திலிருந்தே சுய ஒழுக்கம், ஆளுமைத்திறன், மனித நேயம் உள்ளிட்ட பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.குழந்தைப் பருவத்திலிருந்தே மனதை வளப்படுத்த தியானப் பயிற்சியும், உடலை வளப்படுத்த உடற்பயிற்சியும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார், மேலும் அவர் பேசுகையில் நமது நாமக்கல் மாவட்டத்தை சாலை விபத்தில்லாத மாவட்டமாகவும், போதைப்பொருள் பயன்படுத்தாத மாணவ சமுதாயமாகவும் உருவாக்கிட மாற்றத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே துவக்குவோம் என குறிப்பிட்டார்.முன்னதாக பல்வேறு , கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பள்ளி நிர்வாகிகள்,பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story


