பல்லடத்தில் நடைப்பெறும் "வெல்லும் தமிழ்ப்பெண்கள்" மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்! செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

பல்லடத்தில் நடைப்பெறும் வெல்லும் தமிழ்ப்பெண்கள்  மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்! செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
X
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் 10 பேர் மாநாட்டில் நமது கிழக்கு மாவட்டம் சார்பில் அதிக அளவு மகளிர் கலந்து கொள்ள வேண்டும்.- கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி
"வெல்லும் தமிழ்ப்பெண்கள் "' மேற்கு மண்டல மாநாட்டில் திரளாக மகளிர் பங்கேற்க வேண்டும் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தலைமையிலான மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகின்ற டிசம்பர் 29, திங்கள் அன்று, "'வெல்லும் தமிழ்ப்பெண்கள்'" மேற்கு மண்டல மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழக செயற்குழு கூட்டம் நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகர் கலைஞர் அறிவாலயம் இனமான பேராசிரியர் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் சி.மணிமாறன் தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், தொகுதி பொறுப்பாளர்கள் நன்னியூர் ராஜேந்திரன், ரேகா பிரியதர்ஷினி, முனவர்ஜான், மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப.ராணி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்....
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகின்ற டிசம்பர் 29, திங்கள் அன்று, 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' மேற்கு மண்டல மாநாடு நடைபெற உள்ளது.இம்மாநாட்டில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், கழக துணைப் பொதுச் செயலாளரும், கழக மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் 10 பேர் மாநாட்டில் நமது கிழக்கு மாவட்டம் சார்பில் அதிக அளவு மகளிர் கலந்து கொள்ள வேண்டும். அதற்கான பணியில் ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் ஈடுபட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு விதைப்புக் காலம், அறுவடைக் காலம் என கூறி 60 நாள் வேலை இல்லாத நிலைக்கு மாற்றியதுடன், மகாத்மா காந்தி பெயரை நீக்கி பெயர் மாற்றி உள்ளனர். மேலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மாநில அரசின் பங்கு 10 சதவீதம் இருப்பதை 40 சதவீதமாக மாற்றியும் உள்ளனர்.
ஒன்றிய அரசின் இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்ற 24-12-2025 புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒவ்வொரு ஒன்றிய தலைநகர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒவ்வொரு ஒன்றியத்தில் ஆயிரம் பேர் வீதம் பங்கேற்கும் வகையில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் ஈடுபட்டு போராட்டத்தை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சி.ஆனந்தகுமார், ராஜேஷ் பாபு, மாவட்ட துணை செயலாளர்கள் நலங்கிள்ளி, ராணி பெரியண்ணன், பொருளாளர் ஏ.கே.பாலசந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாயவன், பொதுக்குழு உறுப்பினர்கள் . காளியப்பன், சிவகுமார், குணசேகரன், பூவராகவன். அரசு வழக்கறிஞர் கே செல்வம்,துணை மேயரும், நாமக்கல் கிழக்கு நகர செயலாளருமான செ.பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், என்.ஆர்.சங்கர், சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அ.அசோக்குமார், கே.பி.இராமசுவாமி , பெ.நவலடி, வி.கே.பழனிவேல், கே.பி.ஜெகநாதன், பி.பாலசுப்பிரமணி, ஆர்.எம்.துரைசாமி, எஸ்.செந்தில்முருகன், எம்.பி.கௌதம், இரா.ஜெயபிரகாஷ்,பேரூர் செயலாளர்கள் என்.தனபாலன், முருகேசன், செல்லவேல் (எ) சி.செல்லப்பன், அ.சுப்பிரமணியம், பி.ஜெயக்குமார் பொன்.நல்லதம்பி பழனியாண்டி, கே.அன்பழகன், கே.கண்ணன், ஆர்.எஸ்.எஸ்.ராஜேஷ் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story