நாமக்கல் மாவட்ட ஜங்கம் சமூக நலச் சங்கம் துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

X
Namakkal King 24x7 |21 Dec 2025 7:11 PM ISTநாமக்கல் மாவட்ட தலைவராக லயன்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளராக இளங்கோ,பொருளாளராக ரமேஷ், மாணவர் அணி தலைவராக கார்த்திகேயன், மகளிர் அணி தலைவராக நித்யா, மருத்துவ அணி தலைவராக டாக்டர் மோகன்,கல்வி அணி தலைவராக ஞானசேகர், வர்த்தக அணி தலைவர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.
நாமக்கல் ஜங்கம் புதிய கிளை திறப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ரெசிடன்சி- சிந்து மஹாலில் நடைபெற்றது.இதில் நாமக்கல் மாவட்ட தலைவராக லயன். ஆர். கிருஷ்ணமூர்த்தி, செயலாளராக டி.எஸ். இளங்கோ, பொருளாளராக எம்.கே.ரமேஷ், மாணவர் அணி தலைவராக எஸ்.கார்த்திகேயன், மகளிர் அணி தலைவராக எஸ். நித்யா, மருத்துவ அணி தலைவராக டாக்டர் மோகன், கல்வி அணி தலைவராக ஞானசேகர், வர்த்தக அணி தலைவர் ஜி. சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.ஜங்கம் சங்கம் சமூக நலச் தலைவர் லவ் ஓ நாகராஜ் தலைமையில் நாமக்கல் மாவட்ட தலைவர், பொருளாளர், செயலாளர் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார், பின்னர் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.புதிய நிர்வாகிகளை புலவர் இராமன், நாமக்கல் சிவஞானம், கார்த்திக்கேயன், கோபால், விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தொடர்ந்து நடந்த கூட்டத்தில், சங்கத்தின் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியை அட்வகேட் எஸ். சிவனேசன் ஒருங்கிணைந்தார்.இந்த நிகழ்வில் சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜங்கம் சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
