இராசிபுரம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பொது நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் டாக்டர்.அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களின் தலைமையில் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற நூலகர் தந்தையர் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் தினத்தில் விருது வழங்கு விழா நடைபெற்றது.
இராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் அருகில் சிறப்பாக செயல்பட்டு வரும் முழு நேர கிளை நூலகத்தில் நூலகராக பணியாற்றும் சு. விஜயலட்சுமி மூன்றாம் நிலை நூலகருக்கு டாக்டர் எஸ்.ஆர் அரங்கநாதன் அவர்களின் விருது வழங்கி கௌரவம் செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து இராசிபுரம் தமிழ்க் கழகத்தின் செயலாளர் பள்ளி துணை ஆய்வாளர் கை. பெரியசாமி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.இராசிபுரம் தமிழ்க் கழகம் செயலாளர்முனைவர் கை. பெரியசாமி தனது உரையில் 02.09 .1955 இல் இராசிபுரம் நூலகம் ஏற்படுத்தப்பட்டது . இந்த நூலகத்தில் மொத்தம் 83221நூல்கள் இருப்பில் உள்ளது .இது தவிர போட்டித் தேர்வுக்கான அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படுகிற அத்தனை தேர்வுக்கான மூல நூல்கள் நூலகத்தில் எளிதாக கிடைக்கிறது.இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக 12010 பேர்இருக்கிறார்கள்.புரவலர்களாக 151 நபரும், பெரும் புரவலராக 10 நபர்கள், நன்கொடையாளர்களாக ஆறு பேர் உள்ளனர். இந்த நூலகம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது .ஏழை எளிய மாணவர்கள் தன்னுடைய வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கு இந்த நூலகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இந்த நூலகத்தில் போட்டி தேர்வு தயாரிப்பாளர்களாக 50 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள் இணைய வசதியோடு காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நூலகம் பயன்பாட்டில் சிறப்பாக இப்பகுதியில் சேவைபுரிந்து வருகிறது.இதில் பயிற்சி பெற்றவர்கள் 15க்கும் மேற்பட்டவர் அரசு பணியில் சேர்ந்து உள்ளார்கள் என்பதை பெருமைப்படதக்கதாகும். இராசிபுரம் நூலகம் அதிக உறுப்பினர் சேர்க்கை , அதிக புரவலர்கள் சேர்க்கை கொடையார்கள் சேர்க்கை,பாராளுமன்ற உறுப்பினரை அணுகி மேல் தளம் அமைத்தல் போன்ற சிறப்பான பணிகளை செய்த காரணத்தினால் நூலகராக செயல்பட்டு வரும் சு விஜயலட்சுமிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாண்புமிகு முனைவர்.அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களின் திருகரங்களால் சிறந்த நூலகத்திற்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் அம்மையாருக்கு இராசிபுரம் தமிழ்க் கழகம் பாராட்டு விழா நடத்தி கௌரவப்படுத்துகிறது என்று உரையாற்றினார் இந்த போட்டி தேர்வு மையத்தை பயன்படுத்தி வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்து விட வேண்டும் என உரையாற்றினார்.இராசிபுரம் தேசிய ஜே சி எஸ் நிறுவனர் திருமதி சசிரேகா சதீஷ்குமார் எல்லோ எஜிசாட் ஐ டி நிறுவனர்மோகன்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த நூலகர் விருது பெற்ற திருமதி சு. விஜயலட்சுமிக்கு பாராட்டு விழா எடுத்து சிறப்பு செய்தனர்.சசிரேகா பேசும் போது இராசிபுரத்தில் பெண்கள் அதிகமாக கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.அவர்களின் தன்னம்பிக்கை திறனை வளர்த்திடவும் அவர்களின் ஆளுமை திறனை மேம்படுத்திடவும் அவர்களின் மேலாண்மையை உறுதிப்படுத்திடவும் மிகச் சிறப்பாக இந்த நூலகம் பயன்பட்டு வருகிறது. இதை மேலும் மெருகேற்ற இந்த விருது பயன்பாடு உடையதாக இருக்கிறது விருது பெற்ற அம்மையாரை வாழ்த்துகிறேன் என பாராட்டினார்.எல்லோ எஜீஸாட் நிறுவனர் திருவாளர் மோகன் குமார் அவர்கள் நூலகத்திற்கு UPS வழங்குவதாக உறுதி அளித்தார் மேலும் இந்த பயிற்சி மையத்தை மேம்படுத்துவதற்கு இராசிபுரம் வாசகர் வட்டம் உறுதி செய்யும். என்ற நேர்த்தியான தன் உரையில் தெரிவித்தார்.ஜெகதீசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நூலகத்தின் நூலகர் திரு செந்தில் அவர்கள் விருது பெற்ற திருமதி விஜயலட்சுமி அறிமுகம் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுக்கான தயாரிப்பு படிப்பாளர்கள் நூலக வாசகர் வட்டத்தை சார்ந்தோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.நிறைவாக இராசிபுரம் தமிழ்க் கழகத்தின் பொருளாளர் திருவாளர் வீ. ரீகள் நன்றி உரையாற்றினார்.
Next Story