வீட்டின் உரிமையாளர் அத்துமீறல் போலீசார் விசாரணை

வீட்டின் உரிமையாளர் அத்துமீறல் போலீசார் விசாரணை
X
குமாரபாளையத்தில் வீட்டின் உரிமையாளர் அத்துமீறலலில் ஈடுபட்டதால் குடியிருந்த பெண் போலீசில் புகார் செய்தார்.
குமாரபாளையம் சிவசக்தி நகரில் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் மோகனா, 30. இவர் வீட்டை காலி செய்து விடுவதாக கூறினார். இதனால் மோகனா வசித்த வீட்டை, பண பிரச்னை காரணமாக அதன் உரிமையாளர் ராம்குமார் பூட்டி விட்டார் என கூறப்படுகிறது. டிச. 15ல், மாலை 05:30 மணியளவில் வீட்டை திறந்து விடுங்கள், குழந்தைக்கு தேவையான பொருட்கள் உள்ளது, குழந்தை பசிக்காக அழுகிறது என்று கூறியும் வீட்டை திறந்து விடவில்லை. மோகனாவின் கணவர் மற்றும் உறவினர் சந்திரன் ஆகியோர் ராம்குமார் வசம் கேட்டபோது, அவர்களை தகாத வார்த்தையால் திட்டியதுடன், மோகனாவை பொது இடத்தில் கை பிடித்து இழுத்து, கீழே தள்ளி விட்டுள்ளார். இதனை மோகனாவின் உறவினர் , மொபைல் போனில் வீடியோ எடுக்க, அந்த விவோ மொபைல் போனை பிடுங்கி, ராம்குமார், கீழே போட்டு உடைத்து, அவரையும் காயப்படுத்தி உள்ளார். அந்த போன் மதிப்பு 25 ஆயிரம் என கூறப்படுகிறது. எவனும் தன் மீது போலீசில் புகார் கொடுக்கக் கூடாது, எவனாலும் ஏதும் செய்ய முடியாது எனவும் ராம்குமார் மிரட்ட, மோகனா, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்படி, குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து , ராம்குமாரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story