சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின பேரணி

சர்வதேச மாற்றுத்திறனாளிகள்  தின பேரணி
X
குமாரபாளையம் பகுதியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பேரணி நடைபெற்றது.
குமாரபாளையம் பகுதியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பேரணி நடைபெற்றது.சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, 25ஆம் ஆண்டாக சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட தலைவர் [பழனிவேல் தலைமையில் நடந்தது. பேரணியை காவல் துணை ஆய்வாளர் இளமுருகன், பாசம் முதியோர் இல்லம் குமார்.சமூக ஆர்வளர் பன்னீர் செல்வம் துவக்கிவைத்தனர் . ஆனங்கூர் சாலை சுந்தரம் நகரில் துவங்கிய பேரணி, பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக சென்று, மாற்றுதாதிறனாளிகள் காலனியில் நிறைவு பெற்றது. அங்கு பள்ளிபாளையம் எஸ்.பி.பி.காலனி கிறிஸ்துவர்களால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பிரான்சிஸ்பெர்னாட்ஷா, ஹெலன் பிரிசில்லா தலமைவகித்தனர். மாற்றுத்திறனாளி அமுதாவிற்கு, சுய தொழில் அமைத்து கொள்ள, செப்பல் கடை வைக்க ரூபாய் ஆறாயிரம் ரூபாய்க்கு செப்பல்கள் வாங்கி கொடுத்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா வாழ்த்துக்கள் கூறி, பரிசுகள் வழங்கினர்.
Next Story