ராசிபுரத்தில் மின்வாரியம் சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்...

ராசிபுரத்தில் மின்வாரியம் சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்...
X
ராசிபுரத்தில் மின்வாரியம் சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்...
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்சார சிக்கன வார விழா பேரணி ராசிபுரத்தில் நடைபெற்றது. முன்னதாக ராசிபுரம் எஸ் ஆர் வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக தொடங்கிய பேரணியை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் கொடிய சத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் ஆர். கவிதா சங்கர், மின்வாரிய ராசிபுரம் செயற்பொறியாளர் எம்.சாந்தி, உதவி செயற்பொறியாளர்கள் எம். வெங்கடாசலம், எம். மோகன்ராஜ், எஸ். சங்கர், பி. ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இப் பேரணி மின்சார சிக்கனம் குறித்தும் மின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. வீடுகளில் மின் விளக்குகள்,ஃப்ரிட்ஜ் ,ஏசி, வாட்டர் ஹீட்டர், கணினி, சலவை எந்திரம் உள்ளிட்டவற்றை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மின்சாரத்தை மழைக்காலங்களில் பாதுகாப்பான முறையில் கையாள்வது குறித்தும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வாயிலாக விழிப்புணர்வு செய்தவாறு பேரணியில் பங்கேற்றனர். ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என் ஆர் சங்கர் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
Next Story