நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா! எம்பி, எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு!

X
Namakkal King 24x7 |21 Dec 2025 10:14 PM ISTநாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கே.கே. பாலசுப்பிரமணியம், செயலாளராக ராஜரத்தினம், பொருளாளராக ஐயப்பன், துணைத் தலைவர்களாக அமுதா, நந்தகுமார், இணைச்செயலாளர்களாக கனிமொழி, அருண் பிரசாத், கெளரவத் தலைவர் அறிவழகன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.
நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.2025-27 ஆம் ஆண்டுக்கான, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அண்மையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், நாமக்கல் குற்றவியல் சங்க தலைவராக கே.கே. பாலசுப்பிரமணியம், செயலாளராக ராஜரத்தினம், பொருளாளராக ஐயப்பன், துணைத் தலைவர்களாக அமுதா, நந்தகுமார், இணைச்செயலாளர்களாக கனிமொழி, அருண் பிரசாத், கெளரவத் தலைவர் அறிவழகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள பில்டர்ஸ் மஹாலில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் எம்பி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ, நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அய்யாவு, மூத்த வழக்கறிஞர் செல்ல. ராசாமணி , முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன், துணை மேயர் பூபதி, அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் உள்ளிட்ட திமுக, அதிமுக, பாஜக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.முன்னதாக மூத்த வழக்கறிஞர் செல்ல இராசாமணி நாமக்கல் எம்பி மாதேஸ்வரனிடம் பிஏசிஎல் முதலீட்டாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் , அதற்கு பதிலளித்து பேசிய நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று உறுதியளித்தார். மேலும் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யாவு அவர்களின் கோரிக்கையை ஏற்று குற்றவியல் வழக்கறிஞர் சங்க அலுவலகம் கட்ட ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் உத்தரவாதம் அளித்தார்.
Next Story
