நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் அஞ்சல் ஆயுள் காப்பீடு குறை தீர்க்கும் முகாம் !

X
Namakkal King 24x7 |22 Dec 2025 3:01 PM ISTநாமக்கல் தபால் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் டிசம்பர் 22 முதல் 24ஆம் தேதி வரை(திங்கள்,செவ்வாய்,புதன்) சிறப்பு குறைத்தீர் நடக்கிறது.
தபால் துறை சார்பில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு குறித்த சந்தேகங்களுக்கு குறை தீர்க்கும் முகாம் நாமக்கல் தபால் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் டிசம்பர் 22 முதல் 24ஆம் தேதி வரை(திங்கள்,செவ்வாய்,புதன்) நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். முகாமில், பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் நம்பர், மின்னஞ்சல் , வாரிசு, பாலிசி காலம், தொகை போன்றவற்றின் மாற்றம் அல்லது புதிதாக சேர்த்தல், பிரீமியம் செலுத்தும் முறை, பாலிசி புதுப்பித்தல், கே.ஒய்.சி ஆவணங்கள் இணைப்பு, கடன் தேவை, பிரிமியம் ரசீது புத்தகம், மரணம் அல்லது முதிர்ச்சி கோரிக்கை போன்ற பல சேவைகள் வழங்கப்படுகிறது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையங்களில் முகாம் நடக்கிறது. அஞ்சல் ஆயுள் காப்பீடு வைத்திருக்கும் அனைவரும் தேவையான ஆவணங்களுடன் கலந்துகொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்கள் தேவைகளையும் சந்தேகங்களையும் பூர்த்தி செய்துகொள்ளலாம் என்று நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
