இராமானுஜர் மன்றம் சார்பில் தேசிய கணித தினம் கடைப்பிடிப்பு

X
Pudukkottai King 24x7 |22 Dec 2025 5:52 PM ISTகந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் இராமானுஜர் மன்றம் சார்பில் தேசிய கணித தினம் கடைப்பிடிப்பு
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் இராமானுஜர் மன்றம் சார்பில் தேசிய கணித தினம் கடைப்பிடிப்பு கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிபட்டி நடுநிலைப் பள்ளியில் இராமானுஜர் கணித மன்றம் சார்பில் இராமானுஜர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய கணித தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தேசிய கணித தினம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது கணித மேதை சீனிவாச ராமானுஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அசாத்தியமான பங்களிப்புகளையும் இந்தியக் கணித மரபையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22-ஆம் தேதி தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுத்த முடிவின்படி, ராமானுஜரின் அசாத்தியமான கணித பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவரது பிறந்தநாளான டிசம்பர் 22-ஐ 'தேசிய கணித தினமாக' அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக கடைபிடிக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்தும் நவீன கணிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ராமானுஜரின் அசல் சிந்தனை, தீர்க்க முடியாத சிக்கல்களுக்கு அவர் கண்டறிந்த தீர்வுகள் மற்றும் அவரது உலகளாவிய கண்டுபிடிப்புகளை அங்கீகரிப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். ராமானுஜர் சுமார் 3,900 முடிவுகளை சுயமாகக் கண்டறிந்தார். எண் கோட்பாடு , முடிவிலா தொடர்கள், மற்றும் தொடர் பின்னங்கள் ஆகியவற்றில் அவர் செய்த சாதனைகள் இன்றும் வியக்கத்தக்கவை. "கணிதத்தை வெறும் பாடமாக மட்டும் பார்க்காமல், அது கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மையம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்பதே இந்த தினத்தின் முக்கியச் செய்தியாகும் என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியை செல்விஜாய் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.நிறைவாக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார். மாணவர்களுக்கு கணித புதிர்கள் குறித்து வினாக்கள் கேட்கப்பட்டது மாணவர்கள் ஆர்வமுடன் பதில் அளித்தனர்.
Next Story
