உள்ளூரில் எடுக்கப்பட்ட அய்ம்புலன் படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டம்

குமாரபாளையம் லட்சுமி திரையரங்கில் அய்ம்புலன் என்ற படம் டிச. 19ல் வெளியாகியுள்ளது. இதில் விஜயகாந்தின் பல படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய ராக்கி ராஜேஷ்ன் மகன் தமிழ் .என்பவர்தான் ஹீரோ.. கேரளாவை சேர்ந்த மிருதுளா ஹீரோயின். நடிகர்கள் பெஞ்சமின், நெல்லை சிவா, பாலாசிங், சோமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் குமாரபாளையம், தேவூர், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. இதன் இயக்குனர் முருகபழனி குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இதன் தயாரிப்பாளர் பாலசுப்ரமணி. இந்த படப்பிடிப்பு நடந்த போது, குமாரபாளையம் பகுதி மக்கள் நேரிடையாக பார்த்ததால், இந்த படம் பார்க்க வந்த ரசிகர்கள் படம் பார்த்து உற்சாகத்தில் கைகள் தட்டியும், விசில் அடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இது பற்றி ரசிகர்கள் கூறியதாவது: ஹீரோ தமிழ் சண்டை காட்சிகளில் கேப்டனுக்கு இணையாக பணியாற்றியுள்ளார். ஹீரோயின் மிருதுளா, தன் பங்கை சரியாக பயன்படுத்தி உள்ளார். வழக்கமாக காதலர்கள் ஊரை விட்டு ஓடியதும், திருமணம், குழந்தைகள் என்று வாழ்வது வழக்கம். ஆனால் இந்த படத்தில், இயக்குனர் முருகபழனி, வித்தியாசமாக கதையை உருவாக்கி உள்ளார்.. தன் மூத்த மகளை வேளாண்மை அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று, கல்லூரி அட்மிசன் செலவுக்கு பணம் இல்லை என்று, தன் இளைய மகள், பூப்பெய்து விட்டாள் என்று விழா நடத்தி, அதில் வரும் மொய் பணத்தை வைத்து, வேளாண் கல்லூரி கட்டணம் செலுத்த முடிவு செய்து விழாவும் விழாவும் நடத்தி விடுகிறார். இரவில் இளைய மகள் தூங்கும் போது, அவள் காலில் விழுந்து, மன்னித்து விடு என்று அழுவது தாய் பாசத்தின் உச்சம். ஒரு கட்டத்தில் தமிழ், மிருதுளா இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். கோவையில் உள்ள நண்பன் வீட்டுக்கு போக, அவர் இவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய, மிருதுளா, ஹீரோ காலில் விழுந்து, என அம்மாவின் ஆசை, நான் வேளாண்மை துறை அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான். என்னை படிக்க வை. நான் அதிகாரியாக ஆன பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூற, ஹீரோ, தமிழ், திருமணத்தை தள்ளி போடுவது காதலின் சிறப்பு. ஒரு வில்லனை மற்றொரு ரவடி கும்பல் கொலை செய்ய முயற்சிக்க, தமிழ் அவரை காப்பாற்ற, அந்த வில்லன் நடிகர், தமிழுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுக்க, அந்த பணத்தில் கதாநாயகியை வேளாண்மை கல்லூரியில் படிக்க சேர்க்கிறார். படித்து முடித்து அதிகாரியாக வரும் போது, மிருதுளா வின் அம்மா, இவர் வீட்டை விட்டு ஓடியதால், பைத்தியம் ஆகி இருப்பது கண்டு துடிப்பது தான் கிளைமாக்ஸ். காதலித்து ஓடும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய படம்,. காதலின் உண்மையை உணர்த்தும் படம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story