கட்சி பெண் நிர்வாகி வீட்டில் அத்து மீறி உள்ளே நுழைந்த தவெக மாவட்ட செயலாளராக இருந்த செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் டிஎஸ்பியிடம் மனு

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியில் தவெக பெண் நிர்வாகி வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக சமூக வலை தளங்களில் பரவிய தகவல் அடிப்படையில் தவெக கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜேஜே செந்தில்நாதன் மீது பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி டி எஸ்பியிடம் மனு
திருச்செங்கோட்டை அடுத்த கூட்டப்பள்ளி பகுதியில் வசித்து வரும் தமிழக வெற்றிக்கழக நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி முனீரா பானு என்பவரது வீட்டில் நள்ளிரவில்தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளராக இருந்த செந்தில்நாதன் இருந்தபோது பிடிபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் முனீரா பானுதன்நிலை விளக்கமாக வெளியிட்ட வீடியோவில் மாவட்ட செயலாளர் தனது வீட்டில் நுழைந்து தவறு செய்ய இருந்ததாகவும் அ எனை அவரது குடும்ப உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் கூறி இருந்தார். இதனை அடிப்படையாக வைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அரசியலில் பெண்கள் ஈடுபடுவதை இது போன்ற செயல்கள் தடுத்து நிறுத்தி விடும் என்பதால் பெண்களிடம் அத்துமீறி நடக்க முயன்ற நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளராக இருந்து தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளஜே.ஜே. செந்தில்நாதன் மீது பாதிக்கப்பட்ட பெண் முனீரா பானு வெளியிட்டுள்ள வீடியோவை ஆதாரமாகக் கொண்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணனிடம் சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் பத்து பெண்கள் புகார் மனு கொடுத்தனர். பின்னர் இது குறித்த செய்தியாளர் களிடம் பேசிய சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோமதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கண்ணாம்பாள் ஆகியோர் கூறியதாவது கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளராக இருந்த செந்தில்நாதன் கூட்டப்பள்ளியில் உள்ள அந்தக் கட்சியின் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி முனீரா பானு வீட்டில் நள்ளிரவில் தவறு செய்ய இருந்ததாகவும் அதனை அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடித்து தடுத்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். இவ்வாறு கட்சியை சேர்ந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்ற மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மீதுஅந்தப் பெண் புகார் கொடுக்காத நிலையில் மகளீர்கள் சார்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாகவும் அந்தப் பெண் கொடுத்த வீடியோவை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட டிஎஸ்பி கிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Next Story