நல்லிபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு!

X
Namakkal King 24x7 |22 Dec 2025 9:00 PM ISTநாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையத்தில் தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவினை வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த ஊர் பொதுமக்கள் சார்பாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.நாமக்கல், நல்லி பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது... நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையத்தில் தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவினை வருகின்ற பிப்ரவரி 14.02.2026 அன்று ஊர் பொதுமக்கள் சார்பாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம், அரசு விதித்துள்ள அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும்,மருத்துவ விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி இவ்விழாவினைச் சிறப்பாக நடத்த விழாக் குழுவினர் திட்டமிட்டுள்ளோம்,எனவே எங்களது கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்துவதற்குத் தேவையான அனுமதியினை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
