பூர்ண சந்திரன் மறைவு : ராசிபுரம் நகர பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி...

X
Rasipuram King 24x7 |22 Dec 2025 9:17 PM ISTபூர்ண சந்திரன் மறைவு : ராசிபுரம் நகர பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி...
திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பூர்ண சந்திரன் அவர்கள் தீக்குளித்து உயிரிழந்தார். தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட அவரது ஆன்மா சாந்தியடைய அனைத்து பகுதிகளிலும் பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்ற பட்டது. இந்நிகழ்வுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொது செயலாளர், திருமதி N.சுகன்யா நந்தகுமார் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட, நகர நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் R.T. இளங்கோ, V.குமார், மற்றும் RJ நாகராஜன், காவியராஜன், S. குமார், விஜயகுமார், வெங்கடேசன், அலாவுதீன், தங்கவேலு, கண்ணன் , தாசில்தார் ஓய்வு செல்வகுமார், மின் பொறியாளர் ஓய்வு கோபால் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
Next Story
