வீதி தோறும் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடத்தில் குறைகேட்பு கூட்டம் : அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு...

X
Rasipuram King 24x7 |22 Dec 2025 9:46 PM ISTவீதி தோறும் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடத்தில் குறைகேட்பு கூட்டம் : அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கிராமம் தோறும் சட்டமன்ற உறுப்பினர், வீதி தோறும் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடத்தில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திங்கட்கிழமை இரவு பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் வீதி தோறும் சட்டமன்ற உறுப்பினரின் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா .மதிவேந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடத்தில் பல்வேறு குறைகளை கேட்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் தொடர்ந்து பல்வேறு பொதுமக்கள் கூறிய பிரச்சனைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் இடத்தில் உறுதி அளித்தார். மற்றும் பல இடங்களில் மனுக்களையும் பெற்றார். இந்த நிகழ்வில் பிள்ளா நல்லூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன், மற்றும் ராஜேஷ் பாபு, கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story
