தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்

தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
X
தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
டிசம்பர் 22 தென்காசி மாவட்ட செய்தி துளிகள் :- 1. தென்காசி மாவட்டம் குற்றாலநாதர் கோயிலில் இன்று திருவாதிரை நிகழ்ச்சி காண கொடியேற்ற நிகழ்ச்சி கோளாகலமாக நடைபெற்றது. 2. தென்காசி மாவட்டத்தில் எஸ் ஐ ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து பெயர்சேர்ப்பு நீக்கம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் டிசம்பர் 27,28 மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் தேவைப்படும் வாக்காள பெருமக்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளவும். 3. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 4. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை முழுநேர நூலகமாக மாற்றி தர வேண்டும் என்று நூலக வாசகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 5. தென்காசி அரசு மருத்துவமனையில் ஐந்தாவது நாளாக செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 7. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. 8. தென்காசி மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் இன்று கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பண்ணை தொழில் அமைப்பது குறித்த 20 நாட்கள் பயிற்சி பெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்குபெற்ற 23 விவசாயிகளுக்கு பயிற்சி சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 9. தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு கண்டிக்கும் வகையில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் தென்காசி எம்எல்ஏ சங்கரன்கோவில் எம்எல்ஏ சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டிசம்பர் 24ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 10. தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட வீரமாமுனிவர் ஆசி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. 11. தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வடகரை சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு செல்ல கனி என்ற விவசாயியின் ஆட்டுக்குட்டியை தாக்கி உள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். 12. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அணைகளில் உச்சபட்சமாக அடவினையினார் கோயில் அணையில் 132 அடி கண நீர் இருப்பு உள்ளது. 13. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் மார்கழி மாத ஏழாவது நாள் பஜனை சிறப்பாக நடைபெற்றது . 14. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு காலனி பகுதி அருகில் ஏராளமான வியாபாரிகள் சாலையோரங்களில் கடை வைத்திருப்பது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதால் புதிய பேருந்து நிறுத்தத்திலோ அல்லது உழவர் சந்தை அருகிலோ கடை அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். புதிய பேருந்து நிலையம் முதல் சிவந்தி நகர் வரை சாலையோர கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நகராட்சியின் சார்பில் இரண்டு முறை கடைகள் அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 15. தென்காசி மாவட்ட வனப்பகுதி மற்றும் விவசாய நிலப் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக மின்வெளி அமைத்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். 16. தென்காசி மாவட்டம் தென்காசி வேளாண் அலுவலர் அவர்கள் விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சியை பார்வையிட அழைப்பு விடுத்துள்ளார். 17. தென்காசி செங்கோட்டை தாலுகா வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டு விற்பனை சங்கத்தின் மூலம் டிசம்பர் 26 முதல் பிரதி வாரம் புதன்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் மட்டை உரித்த தேங்காய் ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வெளிமாநில வியாபாரிகள் கலந்து கொண்டு தேங்காய்களை ஏலம் மூலம் கொள்முதல் செய்து வருகை தர உள்ளனர்.
Next Story