பழுதான எரிவாயு தகனமேடை புகைக்கூண்டு; கடும் புகை வெளியேற்றதால் மக்கள் அவதி!!

பழுதான எரிவாயு தகனமேடை புகைக்கூண்டு; கடும் புகை வெளியேற்றதால் மக்கள் அவதி!!
X
அறந்தாங்கி அருகே உள்ள எரிவாயு தகனமேடையின் புகைக்கூண்டு பழுதடைந்ததால் அதிக்படியான புகை வெளியாவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட பட்டுக்கோட்டை சாலையில் நகராட்சிக்கு சொந்தமான ஜீவனாலயம் என்ற எரிவாயு தகனமேடை உள்ளது. இந்த தகன மேடையின் புகைக்கூண்டு பழுதடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக இறந்தவர்கள் உடலை தகனம் செய்யும்பொழுது புகைக்கூண்டு வழியாக செல்லாமல், உடைந்துள்ள பகுதி வழியாக புகை வெளியாவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே அறந்தாங்கி நகராட்சி பார்வையிட்டு ஜீவானாலயத்தில் உள்ள பழுதடைந்த புகைக்கூண்டை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story