தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டியில் கிராம அறிவு மைய கட்டிட பணிகள் துவக்கி வைப்பு

தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டியில் கிராம அறிவு மைய கட்டிட பணிகள் துவக்கி வைப்பு
X
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி தொடங்கி வைத்தார்
கரூர் மாவட்டம்,தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டி ஊராட்சியில் கிராம அறிவு மையக் கட்டிடம் அமைக்கும் பணிகளை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிதியின் கீழ் ரூ.80 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் பி.உடையாட்டியில் புதிய கிராம அறிவு மையக் கட்டிடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து பி.உடையாபட்டியில் கிராம அறிவு மையக்கட்டிடம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கடவூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கன்னியப்பன், பண்ணப்பட்டி ஊராட்சி மன்ற முன்னால் தலைவர் பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் சின்னத்துரை, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிவாஜி நிர்வாகி பாத்திமாராணி, கார்மல் இருதயராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி புதிய கிராம அறிவு மையக் கட்டிடத்திற்கான பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் அழகர்சாமி,இளைஞரணி அமைப்பாளர் சிவக்குமார், விவசாய அணி பன்னீர்செல்வம், மாணவரணி அமைப்பாளர் இளையராஜா உள்பட ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story