நாமக்கல் மாநகரத்தில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம்!

X
Namakkal King 24x7 |23 Dec 2025 9:04 PM ISTநாமக்கல் தெற்கு நகர தி.மு.க.செயலாளர் ராணா ஆர். ஆனந்த் தலைமையில் 34 வது வார்டு 207 ம் பாகத்தில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்,மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் இராஜேஸ்குமார் எம்.பி்., அவர்களின் வழிகாட்டுதலில் நாமக்கல் தெற்கு நகர தி.மு.க. செயலாளர் ராணா ஆர். ஆனந்த் அவர்கள் தலைமையில் 34 வது வார்டு 207 ம் பாகத்தில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் அந்த பாகத்திற்கான பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கான பணி மற்றும் ஆலோசனை அளித்து மாவட்ட கழகச் செயலாளரின் சீரிய ஆலோசனை மூலம் நாமக்கல் சட்டமன்ற தொகுதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று கழகத் தலைவர் அவர்களை மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வர் ஆக்கவும், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையவும் உறுதி ஏற்கப்பட்டது. கூட்டத்தில் மாநில மகளிர் தொண்டர் அணி செயலளார். இராணி, நகர நிர்வாகி மா.மு.பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், மாமன்ற உறுப்பினர் இளம்பரிதி, மாவட்ட மாணவர் அணி துனை அமைப்பாளர் கடல் அரசன் கார்த்தி, நாமக்கல் தெற்கு நகர திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கோட்டை கெளதம்,மன்னன் ராஜேஸ்,இளைஞர் அணி எம்.எஸ் ராஜேஷ்,பவித்ரன், ஹரிஹரன் மற்றும் நகர சார்பு அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
