புதுடெல்லியில் நடைப்பெறும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாட்டில் நாமக்கல் மாணவிகள் பங்கேற்பு!

X
Namakkal King 24x7 |23 Dec 2025 10:20 PM ISTடிசம்பர் 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் புது டெல்லியில் நடைப்பெறும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாட்டில் நாமக்கல் மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில், நாமக்கல் ஸ்பைரோ பிரைம் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் மாணவிகள் தீக்ஷிதா, வைபவி ஆகியோா் பங்கேற்பு!
புதுடெல்லியில் உள்ள தேசிய பாலபவனில், இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாடு இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனா்.அந்த வகையில், நாமக்கல் மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில், நாமக்கல் ஸ்பைரோ பிரைம் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் மாணவிகள் எஸ்.தீக்ஷிதா,எம்.வைபவி ஆகியோா் பங்கேற்று நாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மறுசுழற்சி செய்திட மாசு இல்லா மற்றும் பசுமை நாமக்கல்லை உருவாக்கிடவும், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் இதுவரை செயல் படுத்திய திட்டங்கள் மேலும் என்ன திட்டங்களை செயல்படுத்திடலாம் என்ற கருத்துருவை நாமக்கல் மாவட்ட இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவிகள் தங்களுடைய பாதுகாவலா்களுடன் சேலம் ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி புறப்பட்டு சென்றனா். அவா்களை, சேலம் மண்டல கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா் சங்கரராமன், ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் பசுமை மா.தில்லைசிவகுமாா் ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பினா்.
Next Story
