தேர்தல் விழிப்புணர்வு மாவட்டங்களில் கலெக்டர் பங்கேற்பு

X
Komarapalayam King 24x7 |24 Dec 2025 3:40 PM ISTகுமாரபாளையத்தில் நடந்த இளம் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்றார்.
குமாரபாளையத்தில் இளம் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவன வளாகத்தில் நடந்தது. தாளாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் துர்கா பங்கேற்று இளம் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இவர் பேசியதாவது: இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை நிச்சயம் பதிவு செய்யுங்கள். மற்றவர்க்கும் வாக்களிப்பது அவசியம் என்று எடுத்து கூறுங்கள். உங்கள் பங்களிப்பு மிக அவசியம். இங்கு பேசிய மாணாக்கர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசியது மகிழ்ச்சி. சிறந்த முறையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பிரச்சப்ரசம் இவ்வாறு அவர் பேசினார். இதில் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சுரேஷ்குமார் தாசில்தார் பிரகாஷ், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தியாகராஜன், கோவிந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் பெரும்பாலோர் தங்கள் வாக்குரிமை பெற விண்ணப்பம் சமர்ப்பித்தனர். மாணவ, மாணவியர் அனைவரும் மாவட்ட கலெக்டருடன் ஒன்று சேர்ந்து அனைவரும் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது கடமை என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
Next Story
