கந்தர்வகோட்டையில் இருந்து புதிய பேருந்து; சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை தொடங்கி வைப்பு!!

கந்தர்வகோட்டையில் இருந்து புதிய பேருந்து; சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை தொடங்கி வைப்பு!!
X
கந்தர்வகோட்டையில் இருந்து புதிய பேருந்துணை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

கந்தர்வகோட்டையில் இருந்து பாப்புடயான் பட்டி குன்னாண்டார் கோவில் 4 ரோடு, குன்னாண்டார் கோவில், உடையாளிப்பட்டி, ராக்கத்தான் பட்டி வழியாக கிள்ளுக்கோட்டை வரை செல்லும் G1 நகர பேருந்து சேதமடைந்திருந்த நிலையில் புதிய பேருந்துணை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர். மா. தமிழ், திமுக மாவட்ட பிரதிநிதி இரா.முருகேசன், திமுக நகர செயலாளர் ராஜா, தாமரை பழனிவேல், நியூஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் மாயக்கண்ணு, CPI ஒன்றிய செயலாளர் அரசப்பன், CPI நகர செயலாளர் நாகராஜன், CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் A. ராமையன், மாவட்ட குழு உறுப்பினர் ரத்தினவேல், ஒன்றிய செயலாளர்கள் G.பன்னீர்செல்வம், நாராயணசாமி, அரசு போக்குவரத்து வணிக மேலாளர் ஏசுதாஸ், இயக்க மேலாளர் தில்லை ராஜன், கிளை மேலாளர் C.சக்திவேல் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story