எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி!!

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நாடெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் வேண்டுகோளுக்கிணங்க மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. வத்தலக்குண்டு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் T.சுதாகர் தலைமையில் வத்தலகுண்டு மேற்கு ஒன்றிய கழகத்தில் கிளை வாரியாக கழக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இதில் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
Next Story
