புளியரையில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புளியரையில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
புளியரையில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேசத்தந்தை மகாத்மா காந்தி பெயரில் செயல்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியும், அதனை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும், அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து செங்கோட்டை அருகே உள்ள புளியறையில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக., பாஜகவை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் திமுக மாநில விவசாய அணி நிர்வாகி அப்துல் காதர், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநில பொதுச் செயலாளர் செங்கை கண்ணன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் மூக்கையா, செங்கோட்டை ஒன்றிய திமுக துணைச் செயலாளர் வாசுதேவன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கோட்டை தாலுகா குழு செயலாளர்.வேலுமயில், தென்காசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி, புளியறை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய திருச்சிற்றம்பலம், செங்கோட்டை காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் முருகையா, புளியறை கிராம காங்கிரஸ் தலைவர் சங்கரலிங்கம், தெற்குமேடு கிராம காங்கிரஸ் தலைவர் சங்கரலிங்கம், கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் நடராஜன், பொன்னையா, ஷெரீப், ஐயப்பன் மற்றும் திமுக, காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக புளியறையில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story