ராமநாதபுரம் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |24 Dec 2025 5:26 PM ISTகும்பரம் ஊராட்சி பகுதியில் விமான நிலையம் அமைந்தால் 11 கிராமங்கள் கடுமையான பாதிப்படையும் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் அரசு ஆவணங்களை ஒப்படைத்து சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் முடிவு
ராமநாதபுரம் மாவட்டம் கும்பரம் ஊராட்சி பகுதியில் விமான நிலையம் அமைய இருப்பதாகவும் சுமார் 510 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு விதமான தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர் இந்த நிலையில் தகவல் அறிந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கும்பரம் பகுதி பொதுமக்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் கும்பரம் பகுதிக்கு விமான நிலையம் வரவே வராது நான் உறுதி அளிக்கிறேன் என சத்தியம் செய்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார், அதன் பின்பு பேசிய அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் விமான நிலையம் அமைய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது அதில் மாணிக்கநேரி என்ற பகுதியில் விமான நிலையம் அமைய உள்ளது ஆகவே கும்பரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதியாக இருக்கவும் இது பற்றி கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் சிவானந்தம் என்பவர் கூறுகையில் கும்பரம் பகுதியில் விமான நிலையம் அமையாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என கூறினார்
Next Story


