இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்முனைவர்.ஜெ.யு.சந்திரலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்

X
Ranipet King 24x7 |24 Dec 2025 5:54 PM ISTஇக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த மாதம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். தொடர்ந்து, சாலை பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து விரிவா
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்முனைவர்.ஜெ.யு.சந்திரலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த மாதம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். தொடர்ந்து, சாலை பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, சாலை பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். சாலை விபத்துகளால் மாவட்டத்தில் அதிக அளவில் இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வருந்ததற்குரிய நிகழ்வு. ஆகவே, சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுடைய முழு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். சாலை விபத்துக்கள் குறித்து இனி வாரந் தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். அதில் விபத்துக்கான காரணங்கள் பிரச்சனைகள் குறித்து வாரந்தோறும் ஆய்வு செய்யப்படும். சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டவைகளில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வட்டங்கள் வாரியாக கேட்டறிந்தார்கள். கொடிக்கம்பங்கள் வைக்கப்படுவதற்கான மாண்பமை மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள வழிகாட்டுதலின் படி கொடிக்கம்பங்கள் அனுமதி வழங்க நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அரசு இடங்களில் நடைபாதை வழித்தடங்கள், சாலை நீர்நிலை இடங்களில் கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி இல்லை. கொடிக் கம்பங்கள் வைப்பதற்கு பட்டா இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இவைகளும் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்காலிக நிகழ்ச்சிகளுக்கு கொடிக்கம்பங்கள் வைப்பதற்கு மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். மேலும் பட்டா இடத்தில் கொடிக்கம்பங்கள் வைப்பதற்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றால் அதனை பரிந்துரை செய்து அரசிற்கு அனுப்பி வைத்து அரசின் அனுமதி கிடைத்தவுடன் அனுமதி வழங்கலாம். இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்க மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும். இதனை உடனடியாக செயல்படுத்த கேட்டுக்கொண்டார். இது போன்று பல்வேறு துறைகள் சார்ந்த பிரச்சினைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
